உச்சி ஏறிக் கொண்டிருந்தான் - சூரியன்
உப்புக் காற்று வேண்டுமென்றது - நுரையீரல்
தண்ணீரில் நனையும் ஆசை வந்தது - கால்களுக்கு
உடனே ஏறினேன் தண்டவாள வண்டியில் . . .
இழவு வீட்டின் இரண்டாம் நாள் சூழல் - பெட்டியில்
என்னோடு சேர்ந்து மொத்தம் மூன்று பேர் .
கதர் ஆடையில், கடந்து செல்லும் இடங்களை,
கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டே - ஒரு பெரியவர்
அரைக்கால் டவுசரும், உடல் அப்பிய பனியனுமாய்
தனியாய் பேசியபடி - ஒரு அல்ட்ரா மாடர்ன் யுவன்
அழுது கொண்டிருந்த காற்றாடியிடம், அமைதியாய்
துக்கம் விசாரித்துக் கொண்டு - நான்
மௌனமாய் கடந்தன நொடிகள் . . .
இறங்கும் இடம் வந்தது - இறங்கினேன்.
எனைத் தொடர்ந்து - அவர்களும்
மீண்டும்,
பதினைந்து நிமிட பஸ் பயணம்
பஸ்ஸில் அவர்களோடு - நான்
வெவ்வேறு இடங்களிலிருந்து தொடங்கிய மூவரின்
பயணம் இப்போது ஒன்றாய் . . .
எங்கே இறங்கப் போகிறார்கள் ? தெரிந்து கொள்ளும்
ஆர்வம் என்னிடம் . . .
ஒவ்வொரு நிறுத்ததிலும், இறங்குவார்களா ?
என்று பார்த்துக் கொண்டே வந்தேன்.
நான் இறங்கும் இடம் வந்தது . . .
இறங்கித் திரும்பிப் பார்த்தால்,
இருவரும் நின்று கொண்டிருந்தனர் .
எங்களின் முன்னால் பரந்து விரிந்திருந்தது - கடற்க்கரை
ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம் . . .
. . . . . .
வெவ்வேறு திசைகளில் நடக்க ஆரம்பித்தோம் . . .
சற்று தூரம் நடந்த பின் ஏனோ அவர்களைத்
திரும்பிப் பார்க்கத் தோன்றியது . . .
இருவரும் கடல் நோக்கி நடந்து கொண்டிருந்தனர் - அவரவர் பாதையில்
கண்களை மூடி காற்றை உள்ளிழுத்தபடி நடக்க ஆரம்பிதேன் . . .
வண்டிக் கடைகள் இழுத்துப் போர்த்தியபடி உறங்கிக் கொண்டிருக்க,
அதனடியில் ஒரு பெண் தனியாக முதுகு காட்டிக் கொண்டிருந்தாள் . . .
அவளைக் கடக்கும் போது . . . தப்புத்தப்பு . . .
அவள் . . . அல்ல . . . அவர்கள்
அவள் மடிகளுக்கிடையே முகம் புதைத்தபடி - அவன்
அவன் தலை கோதியபடி - அவள்
சிதறிய புத்தகங்கள் வெயிலில் காய்ந்து கொண்டிருந்தது . . .
மல வாடை வீசியது அவ்விடத்தில் . . .
கண், காது பொத்தி
அவ்விடத்தை விட்டு வேகமாய் விலகி நடந்தேன் . . .
விலகி - விழித்து
உற்று நோக்கினால் . . .
. . . . . . . . . . . . . .
அங்கிங்கெங்கிலும் மல வாடை . . . .
தூரத்தில் . . . அந்த அல்ட்ரா மாடர்ன் இளைஞன்
நிர்வாணமாய் ஓடிக் கொண்டிருந்தான் . . .
வெகு அருகில் . . . குமட்டல் சத்தம்
கதர் ஆடைப் பெரியவர் - வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார் . . .
பாவம் . . . ஒவ்வாமை . . .
திரும்பி நடந்தேன் . . . .
நடுரோட்டில் புணர்வதர்க்கு
நாம் ஒன்றும் நாய்கள் அல்ல . . .
நாளைய தினசரிகளில் விளம்பரப்படுத்த வேண்டும்,
மெரீனாவில் நாய்பிடிக்க ஆட்கள் தேவை என்று . . .
No comments:
Post a Comment